Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tn job: தமிழக அரசு வேலை - 5 காலி பணியிடங்கள்

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தருமபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள 5 காலி பணியிடங்களை தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள் விவரம்

பணியிடங்களுக்கு நேர்காணல் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரால் தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 42 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் குழந்தைகளை கையாளுதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி-636 705 என்ற முகவரிக்கு வருகின்ற 27.02.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments