தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து துறையின் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரி சோதனை செய்வதற்கான அறிவிப்பு கடந்த 2023 மார்ச் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும், 3 ஆண்டு களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1.50 லட் சம் என 38 மாவட்டங்களுக்கும், ரூ.57 லட்சம் தேசிய ஆசி ரியர் நல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் தத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு மேமோகிராம், இஎஸ் ஆர் சிறுநீர் பகுப்பாய்வு, ரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால், சிறுநீரக பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள் ளிட்ட 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வுள்ளன.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 வயதைக் கடந்த ஆசிரியர்களில், வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியர் களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன் பெற தேர்வு செய்ய வேண்டும். 50 வயதை கடந்த ஆசிரியர்களி டமிருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பிப். 28-ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண் டும்.
இதைத்தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை முதன் மைக்கல்வி அலுவலர்கள் மார்ச் 7-ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து, 150 ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட அளவி லான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவல ருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து உடல் நல பரிசோதனைக்கான கால அட்ட வணையைத் தயாரித்து, அதன் தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்