ஆணை:-
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுள் 1000 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2. பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், இக்காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் 2023-24- அணி நாடுபவர்களை தேர்வு . செய்யவும். மேலே முதலாவதாகப் ஆண்டில் படிக்கப்பட்ட அரசாணையில் ஏற்கனவே நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்ட 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குமாறு மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளளார்.
3 தொடக்கக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாகப் பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனைக்குப் பின்னர், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024-ஆம் ஆண்டின் கண்டறியப்பட்ட 8643 எண்ணிக்கையில், பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது.
(a) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால் (IFHRMS) அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (deployment) செய்யப்பட வேண்டும்.
(b) தற்போது இடைநிலை ஆசிரியர் 1500 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
(c) அவ்வாறு நியமனம் செய்யப்படும் முன்னுரிமை மாவட்டங்களில் தேர்வர்களை முதலில் நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட வேண்டும்.
அரசாணை பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது-FULL DETAILS CLICK HERE
1 Comments
2012 ல்தாள் 2ல்தேர்வான என்னை பட்டதாரி ஆசிரியராக நேரடி பணி நியமனம் செய்யுமா ஆசிரியர்தேர்வுவாரியம்
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்