பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் பொங்கல் பரிசு குறித்து விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பு -1000 ரூபாய்:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுக்கும் ரொக்க பணமும் தமிழக அரசு மக்களுக்கு வழங்குகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 2024 பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை ரொக்க பணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் மக்கள் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இறுதி முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
1 Comments
Yean 1000 pongal gift kudutha enna, kudunga
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்