TRB சற்று முன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalvi Alert

Oct 14, 2025

TRB சற்று முன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TRB சற்று முன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 
மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனு (SLP) எண். 1385/2025இல் 01.09.2025 அன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பாணை அடிப்படையில் தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 231, பள்ளிக்கல்வித் (ஆ.தே.வா) துறை, நாள்.13.10.2025இல் தற்போது தமிழ்நாடு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி-2026, ஜீலை-2026 மற்றும் டிசம்பர்-2026 நடத்த ஆகிய மாதங்களில் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாணைக்கிணங்க, ஜனவரி-2026ஆம் மாதத்தில் சிறப்புத் தகுதித் தேர்வு உத்தேசமாக 24.01.2026 தாள்-I மற்றும் 25.01.2026 தாள்-II நடத்துவதற்கும், இதற்கான அறிவிக்கையை நவம்பர்-2025 மாத கடைசி வாரத்தில் வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜீலை-2026 மற்றும் டிசம்பர்-2026 ஆகிய மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்புத் தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்