Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

TET EXAM - மூன்று ஆசிரியர் தகுதி தேர்வு - அறிவிப்பு வெளியீடு

TET EXAM - மூன்று ஆசிரியர் தகுதி தேர்வு - அறிவிப்பு வெளியீடு
3 சிறப்பு TET தேர்வுகளை நடத்த அனுமதி!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறைப்படி சிறப்பு TET தேர்வுகளை வரும் ஜனவரி, ஜூலை, டிசம்பரில் நடத்த அனுமதி.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறப்பு TET தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி தந்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை.

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தலைமை முகமையாக (Nodal Agency) நியமனம் செய்தும், ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட மாண்புமிகு புதுடெல்லி உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி விடுப்பு மனு (SLP) எண்.1385/2025, தீர்ப்பாணை நாள் 0109,2025இல் கீழ்கண்ட தீர்ப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன:

216. Bearing in mind their predicament, we invoke our powers under Article 142 of the Constitution of India and direct that those teachers who have less than five years service left, as on date, may continue in service till they attain the age of superannuation without qualifying the TET. However, we make it clear that if any

such teacher (having less than five years service left) aspires for promotion. he will not be considered eligible without he/she having qualified the TET.

217. Insofar as in-service teachers recruited prior to enactment of the RTE Act and having more than 5 years to retire on superannuation are concerned, they shall be under an obligation to qualify the TET within 2 years from date in order to continue in service. If any of such teachers fail to qualify the TET within the time that we have allowed, they shall have to quit service. They may be compulsorily retired: and paid whatever terminal benefits they are entitled to. We add a rider that to qualify for the terminal benefits, such teachers must have put in the qualifying period of service, in accordance with the rules. If any teacher has not put in the qualifying service and there is some deficiency, his/her case may be considered by the appropriatedepartment in the Government upon a representation being made by him/her. sentation be

218. Subject to what we have said above, it is reiterated that those aspiring for appointment and those in-service teachers aspiring for appointment by promotion must, however, qualify the TET: or else, they would have no right of consideration of their candidature."

3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், மேற்காணும் தீர்ப்பாணையின் அடிப்படையில் அதிக அளவிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் எனவும், மேற்காண் தீர்ப்பாணையில் தொடர் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அதிக வாயப்பளிக்கும் பொருட்டு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்த உரிய ஆணை வெளியிடுமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.

4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட தொடக்கக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய/நகராட்சி / அரசு / மாநகராட்சி / தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள்,ஆசிரியர் தகுதித் தேர்வில் இதுநாள்வரை தகுதிபெறாதவர்கள் என தெரிவித்துள்ளார். மேலும், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வீதம் ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்துவதன் மூலம் தற்போது பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், அத்துடன் தற்போது பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்குமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாவட்டந்தோறும் அல்லது வருவாய் வட்டம் அளவில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம்வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு வார இறுதி நாட்களில் பணியிடைப்பயிற்சி வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி உடனடியாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தேர்ச்சி பெற வழிவகை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்திட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆணையிடுமாறும் தொடக்கக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அவற்றை ஏற்று, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தவும், இது தொடர்பாக உரிய அறிவிக்கைகளை (Notification) வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்குஅனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

6 மேலும், 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளின் ஆய்வுக்குப்பின் மீதமுள்ள தேர்ச்சி பெறவேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2027 ஆம் ஆண்டில் தேவைக்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments