Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Latest News:ஆசிரியர் கலந்தாய்வு: Mobile -ல் காலியிடங்களை அறியும் வசதி-அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!




ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வின்போது தங்கள் மொபைல் மூலமாகவே காலிப்பணியிடங்கள் பற்றிய விவரத்தை அறியும் வசதி இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு மே 8- ஆம் தேதி தொடங்குகிறது. 


ONLINE -ல் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் Online வாயிலாக கடந்த 3-ஆம் தேதி வரை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டன.

மேலும் இந்த ஆண்டு முதல் பொது மாறுதல் கலந்தாய்வு காலி பணியிடங்களையும் தங்கள் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் தங்கள் login ID  வாயிலாக காலிப்பணியிடங்களை அறிந்துகொள்வதுடன் அதில் 12 இடங்கள் வரை தேர்வுசெய்து வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை அந்தக் காலிப்பணியிடங்கள் தங்கள் சுற்றுக்கு முன் யாராவது எடுத்துவிட்டால் அந்தத் தேர்வு பட்டியலில் இருந்து காலியிடங்கள் நீங்கி விடும் அல்லது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும்.

இந்த புதிய வசதி மூலமாக ஆசிரியர்கள் காலை பணியிடங்களையும் மொபைல் மூலமாக எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் இடத்தை முன்கூட்டியே தெரிவு செய்யும் காலதாமதத்தைத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments