Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC LATEST NEWS - டிஎன்பிஎஸ்சி இன்று (22.05.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC LATEST NEWS - டிஎன்பிஎஸ்சி இன்று (22.05.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண். 17/2024. நாள்: 07/11/2024,ன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 20/12/2024  முதல் 29/12/2024  வரை (25.12/2024 ) . விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை மற்றும் புதுடெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடைபெற்றன.

இத்தேர்வின் முழுவதும் கொள்குறி வகையிலான தேர்வுகளின் உத்தேச விடைகள் (Marked as tick) குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன (75 தேர்வுக் குறியீடுகள்) தேர்வாணைய இணையதளத்தில் 21/02/2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய கொள்குறி வகை தேர்வுகளின் உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் அதாவது 21/02/2025 முதல் 27/02/2025 அன்று மாலை 5.45 மணிவரை, விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால், அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது/பரிசீலிக்கப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments