Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பட்சத்தில் சார்ந்த DEO / HM / Principal மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பட்சத்தில் சார்ந்த DEO / HM / Principal மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24.12.2025 புதன் கிழமை முதல் 04.01.2026 ஞாயிற்றுக் கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 05.01.2026 திங்கட்கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேனி மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என சார்ந்த அனைத்து வகைபள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க தேனி மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை / தொடக்கக் கல்வி /தனியார் பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பட்சத்தில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் / பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments