தமிழ்நாட்டில் தமிழர் திருநாள், அறுவடை திருநாள் என சொல்லப்படும் பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு 1000 ரூபாய் ரொக்க பணமும், கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
1000 ரூபாய் ரொக்க பணம் & பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது?
தமிழகத்தில் கடந்த ஆண்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் தமிழக அரசின் சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்க பணமும், பச்சரிசி, கரும்பு, வெள்ளம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த அறிவிப்பை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செய்தி வட்டாரங்களில் இருந்து வந்துள்ள செய்தி என்னவென்றால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கடந்த ஆண்டை போன்றே 1000 ரூபாய் ரொக்க பணமும் ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்கள் தமிழக அரசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 8 அல்லது 11ஆம் தேதிக்கு பிறகு விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
1 Comments
mareeshwaran16@gmail.com 1/130 South street S Thoppur virudhunagar 626106
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்