திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக துவங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர்/ஒட்டுநர் பதவிக்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண்.35,36 தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வரும் 15.10.2023 மாலை 5.30 பி.ப மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது dswo.tpr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்பட வேண்டும்.
காலி பணியிடம் பற்றிய விபரங்கள்:
வேலையின் பெயர்: மைய நிர்வாகி
சம்பளம்: மாதம் முப்பதாயிரம் ரூபாய் தொகுப்பூதியம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.10.2023
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்