மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் சென்னையில் வேகமாகப் பரவி வருகிறது.அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளி களிலும் 12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு செப்.16 முதல் 25-ம் தேதி வரை கண் பரி சோதனை செய்யப்படுமென தமிழக சுகாதாரத் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் தியாகராயநகர் மேல் நிலைப் பள்ளியில், மெட்ராஸ் ஐ கண் பரிசோதனை தொடர் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநராட்சி பள்ளி கள் மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் அனைத்திலும் உள்ள 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மெட்ராஸ் ஐ கண் பரிசோதனையை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மேற்கொள்கிறது. இன்று (நேற்று) முதல் வரும் 25-ம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்