Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உண்டு உறைவிட பள்ளி : ஆசிரியர் வேலை|| புதிய வேலை வாய்ப்பு செய்தி

உண்டு உறைவிட பள்ளி : ஆசிரியர் வேலை|| புதிய வேலை வாய்ப்பு செய்தி 
திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கீழ்க்காணும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளிகளுக்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் இளங்கலை பட்டத்துடன் B.Ed மற்றும் TET இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை நேரில் பெற்று 04.08.2025 தேதிக்குள் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தனித்தனியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பத்தில் கல்வித் தகுதி, அனுபவம், பிறந்த தேதி, இருப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்கள் போன்றவற்றை தெளிவாக குறிப்பிடவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுப்பூதியத்தில் தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும்.


மாதாந்திர தொகுப்பூதியம்- விடுதிக்காப்பாளர்- ரூ.29,000/- விடுதிக்காப்பாளரே தலைமை ஆசிரியையாகவும் செயல்பட வேண்டும். ஆசிரியைக்கு மாதாந்திர தொகுப்பூதியம்- ரூ.24,000/- வழங்கப்படும். ஆசிரியைகள் சுழற்சி முறையில் விடுதியில் தங்கி பணியாற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments