Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Job Fair: மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்




நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் நாகப்பட்டினம் இணைந்து டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் (VDP) கல்லூரியில் 23.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

8ம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு. கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள். ஐ.டி.ஐ., டிப்ளமோ. பொறியியல் மற்றும் தையல்கலை பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள இம்மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்கள் முன்னரே பதிவு செய்து கொள்ளலாம். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய விரும்புபவர்கள் அலுவலக தொலைபேசி எண்ணில் (04365-252701) தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்புப் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் புகைப்படம், அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு (Bio-Data) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


Post a Comment

0 Comments