Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 - தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விவரங்கள் எப்போது வெளியீடு?


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான முதல்கட்ட முகாம்கள் ஜூலை 24-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த முகாம்களின் வழியாக 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இரண்டாம் கட்ட முகாம்கள் சனிக்கிழமை தொடங்கின.
2-ஆம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடத்தத் தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேவையின் அடிப்படையில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விவரங்கள் எப்பொழுது வெளியிடப்படும்?:

ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களின் விவரங்களை யும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. 


இதனை தொடர்ந்து,செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து தகுதியான மகளி ருக்கு உரிமைத் தொகைக்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 15-இல் திட்டம் தொடங்கப்பட்டு அதிலிருந்து ஒரு வாரத்துக்குள் தகுதி பெற்ற அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1,000 செலுத்தப்பட இருப்பதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments