அனைவருக்கும் வணக்கம்.*
ப.நடராசன், மாநிலப் பொருளாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்.
அனைவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க அரசு தரப்புக்கு உரிய ஒத்துழைப்பினை நல்குமாறு எமது தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்திருக்கிறேன்.
அரசு தரப்பும் தடையை மட்டும் நீக்கினால் கூட போதும். கருணை மதிப்பெண் வழங்குவது குறித்த வழக்கு (Main petition) வேண்டுமானால் தொடரட்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் விவகாரத்தில் நீதிமன்றம் ஏதாவது வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினால், அதற்கேற்ப கட்டாயம் மாற்றம் நிகழும்.
தடை தொடர்வதால், மற்றொரு தேர்வினை உடனடியாக நடத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேற்கண்ட ஷரத்துக்களின் அடிப்படையில் நாளையோ அல்லது நாளை மறு நாள் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முடிவுகளுக்கான தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம்!
தேர்வில் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள்🙏🙏.
கருணை மதிப்பெண் மற்றும் 60 marks to all category ஆகிய வழக்குப் போராட்டங்கள் தீர்ப்பினை எட்டும் வரை தொடரும்!
உங்களின் முயற்சி ஒருபக்கம்! எங்களின் போராட்டம் ஒரு பக்கம்! என இயன்ற வரை போராடி டெட் என்னும் கொடிய தாக்குதல்களைத் தகர்ப்போம்.
என தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்