இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டசுற்றறிக்கை:
பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலில் பணிநிரவல் கலந்தாய்வும் அதற்க்கு பின்னர் மாவட்டத்துக்குள்ளும் அதன் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டமும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
உட ற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு August.29-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும். மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் August 16- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை EMIS WEBSITE-ல் ஆக.17-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு EMIS தளத்திலிருந்து பெறப்படும் ஒப்புதல் நகலை தங்கள்வசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே பணிமாறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
முறையான பணியிடத்தில் நியமனம் பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
மாறுதல் பெறும் பகுதி நேர ஆசிரியர்கள் பணியிலிருந்து விடு விக்கப்பட்டவுடன் மாறுதல் பெற்ற பள்ளியில் உடனடியாக பணியில் சேர வேண்டும்.
ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் மாறுதல் ஆணை பெறுவதால் இந்த ஆணையை ரத்து செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கோரும் கோரிக்கைகளை பரிசீலிக்க இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்