மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள மொத்த சமையல் உதவியாளர் பணியிடங்களில், 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையில், மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் பத்தி 3, v-ல் இறுதியிலுள்ள "சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதற்கு" இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. இந்நிலையில், அரசாணை (நிலை) எண்.95. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-2) துறை, நாள் 16.12.2024-க்கு பின்வருமாறு திருத்தங்கள் வெளியிடப்படுகிறது:-
திருத்தங்கள்
(1). மேற்குறிப்பிட்ட அரசாணையின் பத்தி 3, 1|-ல் உள்ள "தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள். 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் (சிறப்பு கால முறை ஊதிய ((STS) நிலை-1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும்" என்கிற சொற்றொடருக்குப் பதிலாக, "இவ்வாறு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay -ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்பட வேண்டும்" என்ற சொற்றொடர் சேர்க்கப்படுகிறது.
(ii). மேற்குறிப்பிட்ட அரசாணையின் பத்தி 3, v-ல் இறுதியிலுள்ள "சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது" என்ற சொற்றொடர் நீக்கம் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக. மேலே ஏழாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை (நிலை) எண்.32. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-2) துறை. நாள் 12.03.2025-ல் வெளியிடப்பட்டுள்ள ஆணையினைப் பின்பற்றி சமையல் உதவியாளர் பதவிக்கான நேரடி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்" என்ற சொற்றொடர் சேர்க்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்