Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday News: August 3 உள்ளூர் விடுமுறை இந்த மாவட்டத்திற்கு அறிவிப்பு - எப்போது? எந்த மாவட்டம் முழு விவரங்கள்

தமிழ்நாட்டில் ஆகஸ்டு மூன்றாம் தேதியும் சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:



சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு 03.08.2023,வியாழக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளான தமிழ்மாதம் ஆடி 18-ஆம் நாளை முன்னிட்டும், ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் தமிழ்மாதம் ஆடி 18-ஆம் நாள் 03.08.2023 வியாழக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகின்ற 19.08.2023, சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments