Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher news: ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வர உள்ளது என்றும், அந்த இடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி  அவர்கள் தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




ஆசிரியர் சங்கங்களுடன்  தனித்தனியாக பேசி இருக்கிறோம். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சருடன் பேச இருந்தோம். ஆனால் முதல்- அமைச்சருடன் அவர் சந்திக்க வேண்டியிருந்ததால் எங்களுடைய சந்திப்பு தள்ளிப்போனது.


திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோதுகூட நிதி அமைச்சரிடம் அது பற்றி பேசியிருக்கிறேன். அவர் சென்னை வந்தபிறகு நானும் எங்கள் துறை முதன்மைச் செயலாளரும் இணைந்து பேசி முதலில் எந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது என்பது பற்றி ஆலோசித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments