தேர்வு அறிவிக்கை வெளியிடாதது ஏன்? - பாமக தலைவர்அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
மேலும் 2013-2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் கல்வித்தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனை தொடர்ந்து Government School- ல் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியை மேம்படுத்த முடியாது என்றும், இந்த அடிப்படையை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், மேலும் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ( Teacher Recruitment Board) உடனடியாக வெளியிட வேண்டும் என்றும்,இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்பது (Teacher Eligibility Test) தகுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்கள், பகுதி நேர மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க என்பன போன்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்