Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB : ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்ப!

TRB News
TRB News

TRB : ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025ன்படி 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I 15.11.2025 (சனிக்கிழமை அன்றும்) தாள் - II 16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை அன்றும் ) அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நுழைவுச் சீட்டினை (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து, உரிய வழிமுறைகளை பின்பறிறி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களை தேர்விற்கு முந்தைய நாளே பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்வுகள் சார்ந்து ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு (Liaison Officers ) அவர்களது பெயர் மற்றும் அலைபேசி எண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு ஏதேனும் தேர்வு சார்ந்த ஐயப்பாடுகள் இருப்பின் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய தகவல்கள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments