Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை-அறிவிப்புகள் 2023-2024




1.18 அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியங்களில் தொழிலாளர்களுக்கு பதிவுபெற்ற தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மூக்குக் கண்ணாடி உதவித்தொகை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.



18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மூக்குக் கண்ணாடி உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் சுமார் 550 பதிவு பெற்ற தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன் பெறுவார்கள்.

2.18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நில வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு 25 ஆயிரம் ரூபாயும், பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு 50 ஆயிரம் ரூபாயும் ஊக்க உதவித்தொகையாக வழங்கப்படும்.

18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள்மற்றும் அவர்களது குழந்தைகள், உரிய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்கும் பொழுது பங்கேற்கும் ஆண்டில் ஒருமுறை மட்டும் 25 ஆயிரம் ரூபாயும், பன்னாட்டளவில் பங்கேற்கும் பொழுது பங்கேற்கும் ஆண்டில் ஒரு முறை மட்டும் 50 ஆயிரம் ரூபாயும் ஊக்க உதவித் தொகையாக வழங்கப்படும்.


Post a Comment

0 Comments