Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100 - ஊக்குவிப்பாளர்களுக்கு 200 ரூபாய்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற 30.01.2023 அன்று அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் (ESI) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் இக்கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100-ம், ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200-ம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இச்சிகிச்சையானது ஒரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி. ரத்தசேதமின்றி, செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின்விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம்.

முகாம் நடைபெறும் இடம்: 

அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) நாள்: 30.01.2023 (திங்கட்கிழமை)

மேலும் தொடர்புக்கு:
குடும்பநல அலுவலகம் - 0431-2460695

மாவட்ட விரிவாக்க கல்வியாளர், மாவட்ட ஆட்சியரகம், திருச்சி --94432 46269

மேற்கண்ட தகவலை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர் (குடும்பநலம்) தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments