Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி- அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி- அறிவிப்பு 

தஞ்சாவூர் கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக் கல்லூ ரியில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தாய்த்தமிழ்நாட்டுக்குதமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே'தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

இவ்விழாவைக் கொண்டாடும் வகை யில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயி லும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும்மாணவர்க ளுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண் டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.

தஞ்சாவூர் கரந்தை உமா மகேஸ்வ ரனார் கலைக் கல்லூரியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கட்டுரைப் போட்டி ஆட்சிமொழி வரலாற்றில் 3. இராமலிங்கம், பன் மொழிப் புலவர் கா. அப்பாதுரையா ரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய தலைப்புகளிலும், பேச்சுப் போட்டி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன் னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்று தொட்டு தமிழ்நாடு எனும் பெயர். அறி ஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சி மொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும்.

பங்கேற்புப் படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகி யவை முதன்மைக் கல்வி அலுவலர் மூல மாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயி லாகத் தெரிவிக்கப்படும். இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன் பெறலாம்.

Post a Comment

0 Comments