Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு

பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடகள் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன்கருதி இரண்டு பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் பாடம்) காலிப்பணியிடத்தினை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதிபெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு TET PAPER-II தேர்ச்சி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்துமூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ 28.06.2025-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.109, சேலம் 636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments