Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

விடைத்தாள் மதிப்பீடு - விடுமுறை அறிவிப்பு

விடைத்தாள் மதிப்பீடு - விடுமுறை அறிவிப்பு 
பள்ளிக் கல்வியில் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப் பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.4 தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்.19,10-ஆம் வகுப்புக்கு ஏப்.21 ஆகிய தேதிகளில் விடைத்தாள் மதிப் பீட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற் போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையேகிறிஸ்தவபண்டிகையான புனிதவெள்ளிஏப்.18-ஆம் தேதி மற்றும் ஈஸ்டர் தினம் ஏப்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள் ளன. இதற்கு இடைப்பட்ட ஏப்.19-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி வருகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையை உணர்ந்து ஏப்.19-ஆம் தேதி விடைத்தாள் மதிப்பீட் டுப் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று மேல்நிலை வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா சுற்றறிக்கை வாயி லாக வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments