கல்வி நிறுவனங்களின் பெயர்களில்
இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்க ளுக்குள் நீக்க வேண்டும் என் றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீ காரத்தை ரத்து செய்ய வேண் டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்னிந்திய செங்குந்த மகாஜனசங்கத்தைநிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும், பள்ளிகளின் பெயர்களில் உள்ள ஜாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டிருந்தது.
இந்தநிலையில், சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதி மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜாதி பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்று பதிவாளர்களுக்கு பதிவுத் துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். ஜாதி பெயர்க ளைத் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண் டும். கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர் களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும்; இல்லையென் றால், அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசின் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் பெயர்களை அரசுப்பள்ளி என மாற்ற வேண் டும். பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். அவர்களின் ஜாதி பெயர் இருக்கக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித் துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்