Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

இந்த புதிருக்கு விடை சொன்னால் ரூ.8.5 கோடி பரிசு அறிவித்த தமிழக அரசு - ட்ரை பண்ணுங்க - அந்த வின்னர் நீங்களா கூட இருக்கலாம்

இந்த புதிருக்கு விடை சொன்னால் ரூ.8.5 கோடி பரிசு அறிவித்த தமிழக அரசு - ட்ரை பண்ணுங்க - அந்த வின்னர் நீங்களா கூட இருக்கலாம்

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் 8.57 கோடி ரூபாய் என்ற தமிழக அரசின் பரிசை தட்டிச் செல்லப்போவது யார்? 
 உலகின் மிக முக்கியமான பண்டைய நதிக்கரை நாகரிகங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரிகம் ஆகும்.

சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல சிறப்புகளை கொண்ட நாகரிகம். 
இதுகுறித்து 1924 செப்டம்பர் 20-ல் ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரி சர் ஜான் மார்ஷல் வெளியிட்ட அறிக்கை வரலாற்றை திரும்பிப்பார்க்க செய்தது. 

பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழாய்வு செய்தவர், சிந்துவெளி மக்கள் காலம் ஆரியர்களுக்கு முந்தைய காலம் என்றார். இதில் முக்கியமான ஒன்று சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட நகர கட்டமைப்பு, பகடை காய்கள், பானைகள், விளையாட்டு பொருட்கள் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களும் ஒத்துப்போகின்றன.

பானைகளில் காணப்படும் கீறல்கள் மொழிக்கு முன்னதாக குறியீட்டின் வழியாக கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்
என்பது அறிஞர்களின் கருத்து.இந்த எழுத்துக்களை படிக்கும் போது இந்தியாவின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது என்பதும் வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்றார் ஐராவதம் மகாதேவன் .

சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறை படிக்கப்படவில்லை, வாசிக்கப்படவில்லை. ஆனால் வாசிக்க முயன்றவர்கள் எழுத்துருக்கள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தது என்ற கருத்தை முன்வைப்பதாக சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


Post a Comment

0 Comments