Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

எஸ்சி, எஸ்டி, பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி

எஸ்சி, எஸ்டி, பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான

பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

தேர்வாணைய செயலர் ச.கோபாலசுந்தரராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு மூலம் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங் களை நிரப்பும் வகையில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நிகழாண்டு குரூப் 1 தேர்வு மூலம் 12 குறைவு இடங்களும், குரூப் 2 தேர்வு மூலம் 135 இடங்களும், குரூப் 4 தேர்வு மூலம் 434 இடங் களும் என மொத்தம் 581 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பப் பணியிடங்களிலும் பின்னடைவு காலியி டங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments