Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

E-PASS:நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ்

E-PASS:நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ்
நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாவது: நீலகிரி மாவட்டம், உத கைக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங் களது சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதனால் உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது.

இதையடுத்து, நெரிசலைத் தடுக்கும் வகையில் நீதி மன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்துக்குள் நுழை யும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடை முறை நடப்பு ஆண்டு மே 7-ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. இந்த நடைமுறை திங்கள்கிழமையு டன் முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன் றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த நடைமுறையை மீண்டும் நீட்டித்து உத்தரவிடப்பட் டுள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று வர வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீல கிரி மாவட்ட வாகனப் பதிவு எண் டிஎன் 43 பெற் றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ பாஸ்பர தேவையில்லை.

Post a Comment

0 Comments