ஆதி திராவிடர் நலத் துறை பள்ளி ஆசிரியர் களுக்கு மாநில அளவில் பணிமூப்பு பட்டியல் தயாரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் ஜி.லட்சுமி பிரியா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஆதி திராவிடர் நலத் துறை சார்நிலை பணியில் சிறப்பு விதிக ளில் திருத்தம் செய்து அத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளை ஒரே அலகின்கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார். அக்கருத்துருவை ஏற்று ஆதி திராவிடர் நலத் துறை சார்நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்ய அரசு ஆணையிடுகிறது.
ஆதி திராவிடர் நலத் துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர், இடை நிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் ஆகிய பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்ப டையில் மாநில அளவிலான பணிமூப்பு (சீனியாரிட்டி) தயாரிக்கு மாறு ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Comments
Thanks a lot very informative
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்