Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News: காலாண்டு விடுமுறையில் இணைய வழி வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

School News: காலாண்டு விடுமுறையில் இணைய வழி வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை


காலாண்டு விடுமுறையில் இணைய வழியில் வகுப் புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2

வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப். 28 முதல் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அக்.7-ஆம் தேதி மீண்டும் பள்ளி கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காலாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறினால், அந்த பள்ளிகள் மீது துறை ரீதியான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்ச ரிக்கை விடுத்திருந்தது.

இந்தநிலையில் சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல் ராசி புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனி யார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்பு கள் நடத்தி வருவதாகவும், இதில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

உரிய நடவடிக்கை: தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை

பெற்றோர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடு முறை நாள்களில் வகுப்புவாரியாக எடுக்கப்படும் சிறப்பு வேளை குறித்த அட்டவணையை சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கல்வித் துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவ தாக பெற்றோரிடமிருந்து புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறு விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments