Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு 




முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் / சார்ந்தோர் அறிவது, 2024 2025ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் வாரிசுதாரர்கள் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பில் அறுபது விழுக்காடுகளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி. இணையம் (Online) வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2024 ஆகும். எனவே இந்த கல்வியாண்டில் அங்கிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பித்திடுமாறும். மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அனுகிடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments