Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

அரசு பாலிடெக்னிக்(ஜிபிடி) கல்லூரி சேர்க்கை செய்திகள்

அரசு பாலிடெக்னிக்(ஜிபிடி) கல்லூரி சேர்க்கை செய்திகள்



திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள ஸ்ரீரங்கம், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024 2025 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் உயர்வுக்குபடி நிகழ்வு 2024 என்ற திட்டத்தின் மூலம் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டில் சேர்வதற்கும் (Spot Admission], அண்மையில் வெளியிடப்பட்ட ITI - SCVT தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் மற்றும் அடுத்து வெளியிடப்படவிருக்கும் ITI - NCVT தேர்வு முடிவில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டில் சேருவதற்கும் மாணவர் சேர்க்கை கால அவகாசம் 27.09.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து ரூ.150/-ஐ செலுத்தி விண்ணப்பிக்கலாம். SC/ST மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இப்பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் (DCE-Cவில்). இயந்திரவியல் (DME-மெக்கானிக்கல்), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (DEEE-எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானீக்ஸ்), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (DECE-எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன்) மற்றும் கணிப்பொறியியல் (DCSE-கம்ப்யூட்டர்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,142/- மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பீப்போம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு மாணவம் சேர்க்கைக்கு ஐடிஐ (ITI) அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக 95974 76719. 82482 52577, 73739 05151, 90424 18693, 98423 16326. 88389 40440. 80720 02452 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சிறப்பம்சம்

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு. அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், ஸ்மார்ட்கிளாஸ் ரூம், மாணவ மாணவியருக்கு விடுதி வசதி, இலவச பேருந்து பயண அட்டை, இரயில் கட்டண சலுகை, முதலாமாண்டு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், 6 முதல் 10 அல்லது 12 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பை உயர்த்திட திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசின் உதவித்தொகையுடன் தொழிற்சாலைகளில் உள்ளுறை பயிற்சி (Internship Training). தொழிற்முனைவோர் மேம்பாட்டிற்காக நுனு பிரிவின் மூலம் சிறப்பு பயிற்சி, மதிப்பெண் அடிப்படையில் மாணவியர்களுக்கு (Pragati) உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு (Saksham) உதவித்தொகை வருடம் ரூ.50,000, பெற்றோரை இழந்த மாணவ/ மாணவியர்களுக்கு (Swanath) உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாணவ மாணவியர்களுக்கு Chess Club, Cultural Club, Python (App Designing) Club, Literacy Club போன்ற பல்திறன் மேம்படுத்தும் பயிற்சிகள், சென்ற ஆண்டு 2023-2024ல் மூன்றாம் ஆண்டு முடித்த அனைத்து மாணவர்களும், வளாக நேர்காணல் மூலம் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments