இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு
சேர்க்கை : 2024-2025
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. | மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள |னமுகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai -15" என்ற பெயரில் 16.09.2024 அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் : 16.09.2024
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் : 26.09.2024
CONTACT: 044 24343106/24342911
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்