குடிமைப் பணி தேர்வுக்கு இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட தேர்வர்களுக்கு 8 மாதம் கட்டண மில்லா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி எதிர்வரும் அக்.2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு தேவையான அடிப்படை பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படும். வாரந்தோறும் முதல்நிலை தேர்வுக்கான மாதிரித் தேர்வும், திறனறி தேர்வுக்கு பிரத்யேக வகுப்பு களும் நடத்தப்படும்.
இந்த பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கல்வி சான்றிதழ், ஜாதிச் சான் றிதழ் நகல்களை '2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண் ணாநகர், சென்னை' எனும் முகவரிக்கு நேரடியாக வந்து விண்ணப் பிக்கலாம். அல்லது "aarvamiasacademy@gmail.com' எனும் மின் னஞ்சலுக்கு செப்.25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 7448814441, 9150466341 எனும் கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்