Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

job Fair - வேலூரில் ஆக. 31-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

job Fair - வேலூரில் ஆக. 31-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் ஓட்டேரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை வரும் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் லூரியில் நடத்துகின்றன. நடத்துகின்றன.

இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறு வனங்கள் பங்கேற்க உள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


வேலூர், அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்குப் பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம் பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகளும் வழங்கப்பட உள்ளன.

முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படித்துள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments