Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education Portal - பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Education Portal - பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் தொண்டாமுத்தூர், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் மகப்பேறு விடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) காலிப்பணியிடத்தை கல்வி பயிலும் மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களின் நலன் கருதி ரூ.18000 மாதத் தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்திட விண்ணப்பங்கள் 22.8.2024 முதல் வரவேற்கப்படுகிறது.

இந்த தற்காலிக பணியிடம் விடுப்பில் சென்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மீண்டும் பணியில் சேரும் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

இப்பணியிடத்தினை தற்காலிகமாக நிரப்பிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் வசிப்பவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் வேதியியல் பாடத்தில் முதுகலைப்பட்டம் மற்றும் பி.எட் பட்டப்படிப்பு, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்

சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 28.8.2024-மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments