Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

EDUCATION - கற்பித்தலில் புதுமையைப் புகுத்துங்கள்

EDUCATION - கற்பித்தலில் புதுமையைப் புகுத்துங்கள்


கல்வியில் கற்பித்தல் திறன் என்பது கடினமான மற்றும் மென்மையான திறன்களின் கலவையாகும். கற்றலில் மாணவர்களைத் திறம்பட ஈடுபடுத்துவ தற்கும் வகுப்பறையில் நேர்மறையான சூழலை உருவாக்குவதற்கும் கற்பித்தல் திறன் மிகவும் அவசியம். இந்த திறன் அன்றாட பணிகளை நிர்வகிப்பது மட்டு மல்ல மாணவர்கள் தங்கள் அதிகபட்ச திறனை கற்கக்கூடிய சூழலை வளர்ப் பதற்கான அடித்தளம் ஆகும்.

ஆசிரியர்கள் பாடத் தலைப்பில் புலமை, பாடம் தொடர்புடைய கருத்துகள் மற்றும் அது தொடர்பான அண்மைச் செய்திகளை அறிந்திருத்தல் அவசியம். வகுப்பறை சூழ்நிலை, மாண வர்கள் மனநிலை இவையெல்லாம் ஆசிரியரின் திறமையை நிர்ணயிக்கிறது. என்றாலும், ஆசிரியரின் ஆளுமைத்தி றன் மட்டுமே பெரும் பங்கு வகிக்கி றது. கற்பித்தலில் சற்று வித்தியாசமான அணுகுமுறையும், புதுமைகளை புகுத் துதலும் நாளும் மாறுப்பட்ட புதிய யுத்திகளை பயன்படுத்துதல் நல்ல பல னைத் தரும்.

உதாரணமாக ஒருசிலர் வகுப்பு தொடக்கத்தில் மாணவர்கள் மன நிலையை ஒருநிலைப்படுத்த ஒரு நிமிட தியானம் செய்யச் சொல்வதுண்டு. பாடக் கருத்துகளைத் தொடர்பு டைய நகைச்சுவைத் துணுக்குகளோடு இணைத்து கற்பித்தல் நல்ல பயனைத் தரும்.மாணவர்கள் பாடங்களை நினை வில் வைத்துக் கொள்ள உதவும்.


அதேபோலப் பாடம் எடுக்கும்போது மாணவர்களைக் கட்டாயம் குறிப்பு எடுக்க வைப்பது இரட்டிப்புப் பலனைத் தரும். இதன் மூலம் கவனச்சிதறல் இருக் காது. பாடச் செய்திகளைக் குறிப்பெ டுக்கும்போது பாடத் தலைப்பை ஒரு முறை படிக்கும் நிலை ஏற்படுவதோடு சந்தேகங்கள் உடனுக்குடன் களைய வாய்ப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் ஒரே இடத்தில் இருந்துகொண்டு பாடம் எடுக்காமல் வகுப்பறை முழுவதும் கடைசி வரைச் சென்று அவ்வப்போது கண்காணித்தல் பின் இருக்கை மாணவர் களையும் பாடங்களில் கவனம் செலுத்தவைக்கும். மாணவர்களைக் கரும்பலகை யில் பாடத் தலைப்பின் கருத்துச் சுருக் கம் எழுதச் செய்தல் போன்றவை நல்ல பலனைத் தரும். பாடத் தலைப்பை ஒட்டிய ஒருசில மாணவர்களின் சந் தேகத்தைப் பாடத்தை நன்கு அறிந்த மாணவர்களைக் கொண்டு விளக்க முயற்சிப்பது பயன் தரும். தேவையா னால் இடை இடையே ஆசிரியர் திருத் தங்கள் செய்தல், கூடுதல் விவரங்கள் தரு தல், பதில்களை நெறிப்படுத்துதல் நல்ல பலன் கொடுக்கும். மாணவர்கள் பல் வேறு கற்றல் பாணிகள் மற்றும் வேகங்க ளைக் கொண்டுள்ளனர்.



Post a Comment

0 Comments