2024 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம் வழங்குவது குறித்து தமிழக அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் எப்போது?
தமிழ்நாட்டில் (2024) சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு அரசாணை அறிவித்தது.
இந்த அரசானையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ரொக்க பரிசு தொகை பற்றிய அறிவிப்பு ஏதும் இடம் பெறவில்லை. இது மக்களிடையே பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆயிரம் ரூபாய
பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகுப்புடன் வழக்கம்போல் ரொக்கப் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்