Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal Gift: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-பொங்கல் பரிசு பொருட்கள்- புதிய செய்தி

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது?



தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணத்துடன்  கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும்? 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பரிசு தொகுப்புடன், 1000 ரூபாய் ரொக்க பணமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. எப்போது அதற்கான அறிவிப்பு வெளியாகும் என மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளின் மூலமாக 6000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணத்துடன் ,அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு பொருட்கள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து வழங்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில்  வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments