தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற வரும் டிச.31-ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப் பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாண வியருக்கு பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம், ஆண்டுதோ றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மேற்குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. இளநிலை (தொழிற்படிப்பு) முதுநிலை பட்டம், பாலிடெக்னிக் உள் ளிட்ட பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நிகழாண்டில் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாணவ, மாண விகளுக்கு கல்லூரிகளில் வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு எண் மூலம் http://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, http://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைப் பெற வரும் டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களைப் பெற் றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்