Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GROUP -I,II தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமா? நல்ல சான்ஸ் விட்றாதீங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு தொகுதி 1 மற்றும் II ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் காலை 10.30 மணிமுதல் 1.30 மணி வரை நடைபெற்று வருகிறது. 


இப்போட்டித்தேர்விற்க்கான புத்தகங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் Smart Board வசதியுடன் கூடிய வகுப்பறையில், சிறந்த வல்லுநர்களை கொண்டு இலவச பாட குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேர்விற்கு தயாராகும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பட்டபடிப்பை முடித்த தகுதியானவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 8056358107, 7200019666 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments