Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

AGRICULTURE NEWS:விவசாயிகளுக்கான முக்கிய செய்தி:குறைந்த நீரில் அதிக மகசூல்-100 சதவிகிதம் மானியம்

விவசாயிகளுக்கான முக்கிய செய்தி:குறைந்த நீரில் அதிக மகசூல் பெற புதிய உத்தி


புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - துளி நீரில் அதிக பயிர்கள் திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் பெறலாம்.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் துளி நீரில் அதிக பயிர்கள் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டிற்கு அரசிடமிருந்து 800 எக்டர் பரப்பிற்கு பதிவு செய்திட இலக்கு பெறப்பட்டு, முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் MIMIS என்ற இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கணினிச் சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை மாதிரி முடிவுகள் போன்ற ஆவணங்களைக் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நுண்ணீர் பாசனம் அமைப்பதனால் ஏற்படும் பயன்கள், குறைந்த நீரில் அதிக சாகுபடி பரப்பு மேற்கொள்ளலாம். களைகள் எளிதாக கட்டுப்படுகிறது. உரம் செலுத்துவது எளிதாகிறது. நிலக்கடலை மற்றும் பயறுவகை பயிர்களுக்கு தெளிப்பு நீர் நன்கு பயனளிக்கிறது. கரும்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடலாம். 

சொட்டுநீர் பாசன அமைப்பின் மூலம் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு உரம் செலுத்தும் அமைப்பின் வழியாக உரங்களை எளிதாகவும், விரயமின்றி, வேர்பகுதிக்கு அருகில் செலுத்த முடியும். இதனால் உரச்செலவு குறைவதோடு பயிரின் வளர்ச்சியும் சீராக இருப்பதால் குறைவான செலவு மற்றும் குறைவான நீர் பயன்பாட்டில் கூடுதல் மகசூல் மற்றும் லாபம் கிடைக்கிறது.

எனவே, நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகிபயன்பெறலாம்.

Post a Comment

0 Comments