Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

District Employement Office News: பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன.


மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மரு.செ. மணி அவர்கள் தகவல்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மரு.செ. மணி அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தமிழ்/ ஆங்கிலம்/ கணிதம்/ இயற்பியல்/ வேதியியல்/ விலங்கியல்/ வரலாறு/ புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் TNTET Paper - II தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 22.11.2023 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments