Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News: பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெறும். இந்த தேர்வு முடிந்த பிறகு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்படும்.




இதனைத் தொடர்ந்து 2023- 2024 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன.

மேலும் இதனை தொடர்ந்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. 

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வு முடிவடையும் நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 மீண்டும் பள்ளிகள் அக்டோபர் மூன்றாம் தேதி செவ்வாய் கிழமை அன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments