ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி - IV)-இல் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / கள உதவியாளர் / வரித் தண்டலர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது, கடந்த 20.07.2023 முதல் 10.08.2023 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்கூறிய கலந்தாய்வில் 5364 இளநிலை உதவியாளர் / வரித் தண்டலர் / கள உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தகுதி வாய்ந்த தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
மேலும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - தேர்வு -IV (தொகுதி - IV)-இல் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 21.08.2023 முதல் 11.09.2023 வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 20,09.2023 முதல் 26.09.2023 வரை நடைபெறும். தேர்வாணைய அலுவலகத்தில் போதிய இடவசதி இன்மையால் மேற்கண்ட நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் இளம் சிறார்கள், பெண்கள் மற்றும் முதியோர் ஆகியோர்களை உடன் அழைத்து வருவதினை தவிர்த்து தேர்வாணைய அலுவலகத்தின் எதிரே ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தேர்வாணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்