Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.

 அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் குடும்பங்களுக்கு அவர்கள் 2024-25 வழங்கப்படும் ஆம் ஆண்டு முதல் மீனவ மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000/-லிருந்து ரூ.8000/- ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

 அவ்வறிவிப்பினை செயல்படுத்தும்விதமாக 22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments