இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் பணி மேற்கொள்ளுதல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசிப் பணிகள் மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி வளர்ப்பு நாய்களுக்கு மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும் கோழிகளுக்கு, கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்படும்.
கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும், அவசர சிகிச்சைக்கு கால்நடை ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்.
கால்நடைகளின் சாணம், ரத்த மாதிரிகள், சளி, பால், தோல் சுரண்டல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளரப்போருக்கு விளக்கப்படவுள்ளது. தீவன புல் விதைகள், கரணைகள் மற்றும் தாது உப்பு கலவை பைகள் வழங்கப்படும்.. அசோலா மற்றும் ஊறுகாய் புல் தயாரித்தல் தொடர்பான செயல்முறை குறித்து விளக்கமளிக்கப்படும். மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சிகள் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், பால் உற்பத்தி திறன் அதிகரிக்கவும். தீவனம் உற்பத்தி அதிகரிப்பது குறித்தும் கருத்தரங்கு நடத்தப்படும்.
கறவை பசுக்களின் மலட்டுத் தன்மைக்கு ஸ்கேன் கருவி மூலம் நோயின் தன்மையை கண்டறிந்து சிறப்பு சிகிச்சையளிக்கப்படும், மேற்கண்ட பணிகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். எனவே சுற்றுபுற கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து
பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்